பெரம்பலூர் அருகே கூட்டுறவு வங்கியில் செயலாளர் தற்கொலை!

schedule
2023-10-16 | 08:40h
update
2023-10-16 | 08:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Secretary commits suicide in co-operative bank near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டைமான் துறை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கணபதி (54). இவர் அதே ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கூடுதல் செயலாளராக உள்ளார்.
Advertisement

இவருக்கு மனைவி சரசுவதி (45)
மகன் அருண்குமார் (17)
ராஜ விக்னேஷ் (8) ஆகியோர் உள்ளனர்.
விற்பனையாளராக 01.10.1991 பணிக்கு சேர்ந்த அவர் தற்சமயம் கூடுதல் செயலாளராக வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலை சுமார் 08.00 மணிக்கு பணிக்கு வீட்டிலிருந்து வங்கிக்கு சென்றவர், வங்கியின் உள்ளே விசம் குடித்து இறந்து கிடந்துள்ளார்,
முதலில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கமலாதேவி என்பவர் வங்கிக்கு உள்ளே வரும் போது இறந்து கிடப்பதை பார்த்துள்ளார்.
பின்னர்
இச்சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு போலீசார், குடும்ப பிரச்சனையா, அல்லது உயர் அதிகாரிகள் தொல்லையா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கியில் செயலாளர் விஷம் குடித்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 02:21:21
Privacy-Data & cookie usage: