Selection of the Tamil Nadu team for the 2023 KHELO competitions: Collector’s announcement!

மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி 2023ஆம் ஆண்டிற்கான இப்போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் 19.01.2024 முதல் 31.01.2024 முடிய நடைபெறஉள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் – 2023-ல் கூடைப்பந்து, கபடி ,கோ-கோ, வாலிபால், ஹாக்கி மற்றும் கால்பந்து ஆகியவற்றிற்கான குழு விளையாட்டுகளில் தமிழ்நாட்டு அணியும் இடம்பெற உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டுவீரர் – வீராங்கனைகள், அவர்களின் சிறப்பான செயல்திறனின் அடிப்படையில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாட்டு அணிகளில் இடம் பெறுவதற்கான தேர்வுப் போட்டிகள் ஏற்கனவே 30.11.2023 முதல் 02.12.2023 வரை நடைபெற இருந்த நிலையில் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. எனவே தற்போது 12.12.2023 – 13.12.2023 ஆகிய நாட்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் நடத்தப்படவுள்ளது.

கூடைப்பந்து விளையாட்டில் பெண்களுக்கு 12.12.2023 அன்று காலை 7.00 மணிக்கும், ஆண்களுக்கு 13.12.2023 அன்று காலை 7.00 மணிக்கும், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கத்திலும்,

கால்பந்து விளையாட்டில் பெண்களுக்கு 12.12.2023 அன்று காலை 7.00 மணிக்கும், ஆண்களுக்கு 12.12.2023 மற்றும் 13.12.2023 ஆகிய நாட்களில் காலை 7.00 மணிக்கும், திண்டுக்கல் மாவட்டவிளையாட்டுஅரங்கத்திலும்

கபாடி விளையாட்டில் பெண்களுக்கு 12.12.2023 அன்று காலை 7.00 மணிக்கும். ஆண்களுக்கு 13.12.2023 அன்று காலை 7.00 மணிக்கும் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திலும்,

கோ–கோ விளையாட்டில் பெண்களுக்கு 12.12.2023 அன்று காலை 7.00 மணிக்கும் ஆண்களுக்கு 13.12.2023 அன்று காலை 7.00 மணிக்கும், அண்ணா விளையாட்டரங்கம் திருச்சிராப்பள்ளியிலும்,

வாலிபால் விளையாட்டில் பெண்களுக்கும் 12.12.2023 அன்று காலை 7.00 மணிக்கும் ஆண்களுக்கு 13.12.2023 அன்று காலை 7.00 மணிக்கும், அண்ணா விளையாட்டுஅரங்கம் திருச்சிராப்பள்ளியிலும்,

ஹாக்கி விளையாட்டில் பெண்களுக்கு 12.12.2023 அன்று காலை 7.00 மணிக்கும், ஆண்களுக்கு 13.12.2023 அன்று காலை 7.00 மணிக்கும், டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கம் மதுரையிலும் தேர்வுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இத்தேர்வில் கலந்துக்கொள்பவர்கள் (18 வயதுக்குஉட்பட்டவர்கள் / 01.01.2005 அன்று அல்லது அதற்குப்பிறகு பிறந்தவர்கள்), ஆதார்கார்டு அல்லது பாஸ்போர்ட், 10ம் வகுப்பு பள்ளிக்கல்விச் சான்று, பிறப்புச் சான்று ஆகியவைகளுடன், போட்டி நடைபெறும் அன்று, போட்டி நடைபெறும் இடத்தில் தேர்வுக்குழு முன் ஆஜராக வேண்டும். இதற்கான பயணக்கட்டணம் மற்றும் தினப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது.

எனவே தகுதியுள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மேற்படி தேர்வில் கலந்துக்கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!