மக்களுக்கான மருத்துவர் கழகம் சார்பில் பெரம்பலூரில் கருத்தரங்கம்

schedule
2018-07-23 | 07:17h
update
2026-07-05 | 19:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Seminar on Perambalur on behalf of the People’s Medical Association

பெரம்பலூர் மக்களுக்கான மருத்துவர் கழகம் சார்பில் பெரம்பலூர் லட்சுமி இன்ஸ்டியூட் ஆப் பாராமொடிக்கல் கல்லூரி கூட்டரங்கில் கருத்தரங்கம் நேற்று நடந்தது.

கருத்தரங்கத்திற்கு,டாக்டர் கதிரவன் தலைமை வகித்தார். டாக்டர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.

மக்களுக்கான மருத்துவர் கழக மாநில செயலாளர் டாக்டர் கருணாகரன் தேசிய மருத்துவ ஆணையம் குறித்த ஒரு பார்வை எனும் தலைப்பில் பேசுகையில், இந்தியாவில் 13.லட்சம் மருத்துவர்கள் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 8 லட்சம் மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆயிரத்து 165 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற அடிப்படையில் மகத்தான மருத்துவப்பணி செய்து வருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் சுமார் 450 புதிய மருத்துவக்கல்லூரி இந்தியாவில் துவங்கப்படும் என்றார்.

Advertisement

பேச்சாளர் இராஎட்வின் பேசுகையில், நம் தேசத்தின் வலது திருப்பமும், இடது மாற்றும் எனும் தலைப்பில் பேசுகையில்,

மக்களோடு மக்களால் பின்னி பினைந்து வாழ்வபர்கள் இடதுசாரி. சக மனிதர்களோடு அந்நியப்பட்டு கிடப்பன் வலதுசாரி. மக்களுக்கான மருத்து பணிகள் செய்யும் மருத்துவர்கள் இடது சாரி மருத்துவர்கள் என்றும், பணத்திற்காக மருத்துவ பணிகள் செய்யும் மருத்துவர்கள் வலது சாரி மருத்துவர்களும் ஆவார்கள்.

இடது சாரி மருத்துவர்கள் கம்யூனிஸ்ட் வாதிகளாக இருக்கவேண்டியதில்லை. ஆனால் பல மருத்துவர்கள் வலது சாரி மருத்துவர்களாக உள்ளனர். இடது சாரி மருத்துவர்களை வலது சாரி மருத்துவர்களாக மாற்றுக்கின்ற பணியை பாரதிய ஜனதா அரசு செய்து வருகிறது.

மக்களுக்கான மருத்துவர் கழகத்தில் உள்ள மருத்துவர்கள்

மக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சேவைகளையும் செய்யவேண்டும். ஆகவே மருத்துவர்கள் கம்யூனிஸ்ட்டுக்காக மாறாவிட்டாலும், இடது சாரிகளாக மாறவேண்டியது இன்றைய தேவையாகும் என்றார்.

இதில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, டாக்டர்கள் குணகோமதி, விஜய் ஆனந்த், சேசு, ரமேஷ், புவனேஸ்வரி, உள்பட ஏராளமான டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 19:29:36
Privacy-Data & cookie usage: