நாமக்கல் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான புயல் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

schedule
2018-11-23 | 11:17h
update
2018-11-23 | 11:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sending relief materials to Rs 5 lakhs on behalf of AMMK East District Namakkal

நாமக்கல் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் கஜா புயல் நிவாரணத்திற்காக ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Advertisement

நாமக்கல் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காஜ புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பொதுமக்களுக்காக ரூ.5 லட்சம் மதிப்புள் நிவாரணப் பொருட்கள் 2 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக அரிசி, பருப்பு, எண்ணை வகைகள், போர்வைகள், வேஷ்டி, துண்டுகள், சோப், பேஸ்ட், பிரஷ், பிஸ்கட் ரகங்கள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் 2 லாரிகளில் ஏற்றப்பட்ட மாவட்ட அமமுக அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

மாநில அவைத்தலைவர் அன்பழகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ சம்பத், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சந்திரன், ஜானி உள்ளிட்ட திரளான கட்சிப் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.09.2026 - 01:15:38
Privacy-Data & cookie usage: