மேல்நிலைத் தேர்வு : தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்

schedule
2017-08-23 | 15:51h
update
2026-07-14 | 21:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

September – October: 2017 Higher Secondary Examination: Candidates can apply on-line

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தி.அருள்மொழிதேவி விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள செப்டம்பர் – அக்டோபர் 2017 மேல்நிலைத் (இரண்டாம் ஆண்டு) துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் :

இத்துறையால் நடத்தப்பட்ட மேல்நிலை (இரண்டாம் ஆண்டு) தேர்வெழுதியோர் தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். (H வகையினர்)

Advertisement

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும் 01.10.2017 அன்று 161ஃ2 வயதும் பூர்த்தி அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக’’ விண்ணப்பிக்கலாம். (HP வகையினர்).

தனித்தேர்வர்கள் (ஆண்கள்) பெரம்பலுhர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், (பெண்கள்) பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் 24.08.2017 (வியாழக்கிழமை) முதல் 31.08.2017 (வியாழக்கிழமை) மாலை 05.45 மணிக்குள் 25.08.2017 (வெள்ளிக்கிழமை) மற்றும் 27.08.2017 (ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து) தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.

தேர்வுக்கட்டணம் ஆன்-லைன் பதிவுக் கட்டண விவரம் மற்றும் செலுத்தும் விதம் – மறுமுறை தேர்வெழுதுவோர் ( H வகை தனித்தேர்வர்கள்) ஒவ்வொரு பாடத்திற்கும், ரூ.50- வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக்கட்டணமாக ரூ.35- ம் செலுத்த வேண்டும். ஆன்-லைன் பதிவுக்கட்டணம் ரூ.50- .

நேரடித் தனித்தேர்வர்கள் (HPவகை தனித்தேர்வர்கள்)தேர்வுக் கட்டணம் ரூ.150- இதரக்கட்டணம் ரூ.35- கேட்டல், பேசுதல் திறன் தேர்வு ரூ.2- மொத்தம் ரூ.187- ஆன்-லைன் பதிவுக்கட்டணம் ரூ.50- செலுத்த வேண்டும்.

தபால் தேர்வுக்கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை பணமாக செலுத்த வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

தேர்வு முடிவுகள் மூலம் பெறப்படும் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும், என தெரிவித்துள்ளளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.07.2026 - 21:27:46
Privacy-Data & cookie usage: