Set Top Box: Cancellation of cable licenses if any collect money from people : Minister Manikantan

தமிழ்நாடு அரசின் விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கிட பொது மக்களிடத்தில் பணம் வசுலிக்கும் கேபிள் ஆப்பரேரட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தகவல் தொழில்நுட்பத்துைற அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளில் பள்ளிக்கல்வி துறையின் சார்பாக நடைபெற்ற லேப்டாப் வழங்கும் விழாக்களில் 27 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 187 மாணவவர்களுக்கு ரு.4.77 கோடி மதிப்புள்ள லேப்டாப்களை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கி பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு விலையில்லா லேப்டாப் வழங்குதல் என்ற மகத6்தான திட்டத்தின அறிவித்து செயல்படுத்தி உள்ளார். இத்திட்டமானது இந்திய திருநாட்டில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் சயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சிறப்பாக திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளில் மொத்தம் ரு.8 ாயிரத்து 900 கோடி மதிப்பில் ஏறத்தாழ 33 லட்சம் மாணவ மாணவியர்கள் பெற்று பயனடையும் வகையில் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டில் ஏறத்தாழ 5 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிட திட்டமிடப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக்கல்வி துறையின் சார்பாக வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் நடப்பு கல்வியாண்டில் 85 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சார்ந்த 10 ஆயிரத்து 778 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிட திட்டமிடப்பட்டு 85 சதவீத மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சில தினங்களில் மீதமுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு 100 சதவீதம் நிறைவு செய்யப்படும். இன்றைய தினம் மட்டும் கமுதி, முதுகுளத்துர் மற்றும் கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 27 பள்ளிகளில் பயிலும் 3 ஆயிரத்து 187 மாணவர்களுக்கு ரு.4.77 கோடி மதிப்பிலான விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர பொது மக்கள் குறைந்த கட்டணத்தில் தரமான டிஜிட்டல் தொழில்நுட்பத்ததுடன் கூடிய டிவி சேனல்களை பார்த்து பயனடைந்திடும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துறையின் சார்பாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் முலம் விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மொத்தம் 70.52 லட்சம் அரசு கேபிள் சந்தாதாரர்கள் உள்ளனர். செட்டாப் பாக்ஸ் வழங்கும் திட்டத்தை பொறுத்த வரையில் 100 சதவீதம் விலையில்லாமல் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. செயல்படுத்துதல் கட்டணமாக மட்டும் ரு.200 வசுலிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் உள்ள கேபிள் ஆப்பரேட்டர்கள் தமிழ்நாடு அரசின் விலையில்லா செட்டாப் பாக்ஸ்களைமக்களிடத்தில் பணம் வசுலித்து விற்பனை செய்வதாக புகார்கள் வருகின்றன. அவ்வாறு பணம் வசுலிக்கும் கேபிள் ஆப்ரேட்டர்கள் குறித்து பொது மக்கள் தயங்காமல் அரகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திட வேண்டும். தமிழ்நாடு அரசின் விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்கிட மக்களிடம் பணம் வசுலிக்கும் கேபிள் ஆப்பரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.

விழாக்களில் கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், பரமக்குடி முன்னாள் கவுன்சிலர் முனியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!