Sewing machine with free electric motor for minority people: Perambalur Collector announcement!

model

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையில் சிறுபான்மையின சமூகத்தைச் சார்ந்த மக்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையில் திட்டமிட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காக அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவும் இலவச மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களை வழங்கிட தமிழ்நாடு முதமைச்சரால் ஆணையிடப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு வயது வரம்பு 20 முதல் 45 வயது வரை இருக்கவேண்டும். தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும் மற்றும் தையல் கலை பயின்றதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1,00,000- க்குள் இருத்தல் வேண்டும். கைம்பெண் மற்றும் கனவனால் கைவிடப்பட்டவர் போன்றோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!