மாணவர்களுக்கு செக்ஸ் தொல்லை : ஹாஸ்டல் வார்டனுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!

schedule
2017-10-30 | 19:52h
update
2017-10-30 | 19:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sexual Assault to Students: Hostel Warden 10 Years Jail! Perambalur court order

பெரம்பலூர் அருகே விடுதியில் மாணவர்களிடம் ஹோமோ செக்ஸ் : தாளாளர், காப்பாளர் கைது

பெரம்பலுார் அருகே 13 மாணவர்களிடம் ஹோமோ செக்ஸில் ஈடுபட்ட தாளாளர் மற்றும் காப்பாளர் ஆகிய இருவரையும் மங்கலமேடு போலீஸார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் (சர்க்கரை ஆலை) எறையூர் கிராமத்தில் விடுதியுடன் கூடிய ஆர்.சி., நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் விடுதியும் உள்ளது 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கியும் படித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள பொன்னாங்கன்னி நத்தத்தை சேர்ந்த அந்தோணிசாமி விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

விடுதியில் தங்கி பயின்ற மாணவர்களிடம் பகுதியை சேர்ந்த விடுதி வார்டன் அந்தோனிசாமி (வயது 25) தகாத முறையில் ஹோமோசெக்ஸில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில் பெரம்பலுார் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு சம்பவம் உண்மை என தெரியவந்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களை கீழப்புலியூர் அரசு விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறி்த்து மங்கலமேடு போலீஸார் வழக்கு பதிந்து காப்பாளர் அந்தோனிசாமி மற்றும் மாணவர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்த பள்ளியின் தாளாளர் சகாயராஜ் (வயர் 45), ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையில் பள்ளித் தாளாளர் குற்றத்தில் ஈடுபடாததால் சந்தப்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளித்தாளாளர் வழக்கில் இருந்து விடுவிடுக்கப்பட்டார். ஆனால், அந்தோனிசாமியின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் போஸ்கோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறைத்தண்டனை 20 ஆயிரம் அபாராதமும் , அபராதம் கட்டத் தவறினால் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மகிளா கோர்ட் நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு அளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய இழப்பீடு அரசிடம் இருந்து பெற்றுத் தர மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்தார்.

நீதிமன்ற உத்திரவின் பேரில் வார்டன் அந்தோனிசாமியை திருச்சி மத்திய சிறையில் மங்கலமேடு போலீசார் அடைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 04:13:07
Privacy-Data & cookie usage: