பாலியல் வன்கொடுமை : 9 வயது சிறுமிக்கு இடைக்கால நிவாரணம் வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

schedule
2017-04-17 | 18:59h
update
2026-06-24 | 13:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sexually abused by the father of 9-year-old girl to the state court order to provide interim relief

பெரம்பலூர் மாவட்டம், வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை அவரது தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை பெரம்பலூர் மகிளா அமர்வு நீதிமன்றத்தில் விசாரித்து வருகிறது.

Advertisement

அவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மேற்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தனக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்றும் பாதிக்கப்பட்ட தனது மகள் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்றும் தான் கூலி வெலை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் தன்னையும் தனது குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ளும் சூழ்நிலையில் உள்ளதாகவும் எனவே பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு நல்ல உணவு உடை படிப்பு வழங்க தனக்கு போதிய வசதி இல்லை என்றும் எனவே அரசிடமிருந்து இடைக்கால நிவாரணம் வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலணை செய்த பெரம்பலூர் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி என்.விஜயகாந்த் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைக்கால நிவாரணமாக அரசு ரூ.1,லட்சமாக வழங்க உத்தரவிட்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 13:42:20
Privacy-Data & cookie usage: