பணம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

schedule
2016-05-04 | 15:17h
update
2026-09-22 | 23:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் அருகே டூவீலரில் கொண்டு வரப்பட்ட 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு சாலை பகுதியில் வட்டாச்சியர் மருதைவீரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

அப்போது அவ்வழியே வந்த ஏ.டி.எம் இயந்திய பணம் நிரப்புவதற்காக பணம் கொண்டு செல்லும் சி.எம்.எஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை மறித்து சோதனையிட்டதில் கலைராஜா என்பவர் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உரிய ஆவனங்கள் இன்றி பெரம்பலூரிலிருந்து வேப்பந்தட்டை நோக்கி கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர். பெரம்பலூர் வருவாய் கோட்டாச்சியர் பேபி மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.09.2026 - 23:13:38
Privacy-Data & cookie usage: