20 ஆண்டுகளுக்கு முன்பு ஆடுகள் கொடுத்த விவகாரம்: இரு தரப்பு மோதல்: 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது

schedule
2018-02-04 | 19:18h
update
2026-07-04 | 21:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sheep’s affair 20 years ago, bilateral conflict: 5 people including 3 women arrested

பெரம்பலூர் மாவட்டம், வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவி இவரது குடும்பத்தினருக்கு காசியம்மாள் என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 20 ஆடுகளை கொடுத்துள்ளார். கடந்த 20 வருடங்களாக ஆடுகளுக்கான ரூ. 10 ஆயிரம் பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் இன்று இருதரப்பினருக்கும் இது குறித்து, வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. இதில், காசியம்மாள் மற்றும் ராமராஜ் மகள் சுதா மற்றும் மணிகண்டன் ஆகியோர் காயமடைந்தனர்.

இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் சஞ்சீவி மகன் அழகுதுரை (வயது 43), செந்தில்குமார் (வயது 33), அழகுதுரை மனைவி கலைச்செல்வி (வயது 35), செந்தில்குமார் மனைவி முத்தழகி (வயது 33), பழனிமுத்து மனைவி பூபதி (வயது 27), ஆகியோரை கைது செய்த பெரம்பலூர் போலீசார் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறைக்கு அனுப்பினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 21:39:58
Privacy-Data & cookie usage: