சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான கேடயங்கள்; பெரம்பலூர் கலெக்டர் வழங்கினார்!

schedule
2023-03-24 | 14:49h
update
2023-03-24 | 14:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Collector Presents Shields to Best Women Entrepreneurs!

Advertisement

பெரம்பலூரில், ஐஓபி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 2022-2023 ஆம் ஆண்டின் சிறந்த தொழில் முனைவோர்க்களுக்கான கேடயத்தை 5 பெண் தொழில் முனைவோர்களுக்கு கலெக்டர் கற்பகம் வழங்கினார். தொழில் தொடங்க பயிற்சி முடித்தவர்களுக்கு வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மண்டல துணை பொது மேலாளர் கோடிஸ்வர ராவ், ஆர்.பி.ஐ துணை பொது மேலாளர் ஸ்ரீதர் , முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார், மகளிர் திட்ட இயக்குனர் கருப்புசாமி, நபார்டு வங்கி மேலாளர் மோகன் கார்த்திக் , மாவட்ட தாட்கோ மேலாளர் சுந்தரம் , பயிற்சி மைய இயக்குனர் ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 03:31:32
Privacy-Data & cookie usage: