நாமக்கல்லை சேர்ந்த சிந்துஜா, குரூப் 1தேர்வில் மாநில அளவில் 6ம் இடம் பெற்று சாதனை; துணை ஆட்சியராக தேர்வு!!

schedule
2019-01-26 | 19:18h
update
2019-01-27 | 14:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sindhuja of Namakkal, Group 1 examination at the State level at 6th place; Select as deputy Collector !!

நாமக்கல் மாவட்டம் திருமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண், குரூப் 1 தேர்வில், மாநில அளவில் 6ம் இடம் பெற்று சப்-கலெக்டராகி சாதனை படைத்துள்ளார். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் உள்ள திருமலைப்பட்டியை சேர்ந்தவர் நடராஜன். இவர், தற்போது சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சிந்துஜா (24) என்ற மகளும், கவின்குமார் (20) என்ற மகனும் உள்ளனர். அவரது மகன் கவின்குமார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.மகள் சிந்துஜா பி.இ. முடித்து, சென்னையில் உள்ள தனியார் கோச்சிங் சென்டரில் குரூப் 1 தேர்வுக்கு பயிற்சி பெற்றவர், 2017 ம் ஆண்டு முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றார். அதையடுத்து, 2018 ல் முதன்மை தேர்வில் பங்கேற்றார். கடந்த 21ம் தேதி நடைபெற்ற நேர்முகத்தேர்வில், கலந்து கொண்ட சிந்துஜா தேர்ச்சி பெற்று துணை கலெக்டராக தேர்வு செய்யப்பட்டார். அவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் மாநில அளவில், ஆறாவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.இது குறித்து, சிந்துஜா கூறியதாவது:சிறு வயதில் இருந்தே, கலெக்டராக வேண்டும் என்பது ஆசை. அதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்காக படித்து பயிற்சி பெற்றேன்.  தற்போது, அந்த தேர்வில் மாநில அளவில் 6ம் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து குழந்தைகளுக்கும் குறிப்பாக, ஏழை குழந்தைகளக்கு உதவி செய்ய வேண்டும் என்பது ஆசை. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைய வேண்டும். அதற்காக, என்னால், முடிந்த பணிகளை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்

Advertisement

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.01.2026 - 23:42:22
Privacy-Data & cookie usage: