பெரம்பலூர் அருகே சிப்காட் தொழில் பூங்கா: அடிக்கல் நாட்ட முதலமைச்சர் வருகை:  விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டார்!

schedule
2022-11-26 | 06:22h
update
2022-11-26 | 06:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sipcot Industrial Park near Perambalur: Lay stone by Chief Minister : Minister Shivashankar visited the preparations for the ceremony!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவ.28 பெரம்பலுார் மாவட்டத்திற்கு வருகை தந்து, எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

Advertisement

பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் 29.11.2022 அன்று அரியலுார் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியில் நடைபெறும் அரசு விழாவில், பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இந்நிலையில், பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ள பகுதிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நேற்று காலை, கலெக்டர் வெங்கட பிரியா, சிப்காட் நிர்வாக இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, பெரம்பலுார் எம்.எல். ஏ. பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டார்.

போலீஸ் ச.மணி, டி.ஆபர்.ஓ. அங்கையற்கன்னி, மாவட்ட ஊராடசி சேர்மன் குன்னம். சி. ராஜேந்திரன், யூனியன் சேர்மன்கள் ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி, மகாதேவி ஜெயபால் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.05.2026 - 20:41:56
Privacy-Data & cookie usage: