சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி : முதலாம் வகுப்பு செல்லும் மழலையர் பட்டமளிப்பு விழா.

schedule
2017-03-31 | 11:02h
update
2026-06-24 | 11:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Siruvachoor Almighty Vidyalaya School: kindergarten graduation ceremony of the first class students.

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா சிபிஎஸ் பள்ளியில் நர்சரி வகுப்பிலிருந்து முதலாம் வகுப்பு செல்லும் பள்ளி குழந்தைகளுக்கான இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று பள்ளிவளாகத்தில் நடைபெற்றது.

Advertisement

பள்ளி தாளாளர் ஆ.ராம்குமார் தலைமை வகித்தார். முன்னதாக பள்ளி முதல்வர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார். விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.

27 குழந்தைகளுக்கு பட்டம் வழங்கி பின்னர் உரையாற்றிய பள்ளி தாளாளர் ராம்குமார் குழந்தைகள் வளர ஆரம்பிக்கும் மழலைப்பருவத்திலேயே அவர்களை ஊக்கப்படுத்தி வரும் போது அவர்களுக்கு புதிய சிந்தனை பிறக்கிறது. அந்த சிந்தனைக்குள் நல்ல நோக்கத்தினையும் அவர்களுடைய திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இடைவிடாது முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பள்ளி துணை முதல்வர் சாரதா, ஆசிரியர்கள் சந்திரோதயம், ஹேமா. கயல்விழி, சாந்தி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். முடிவில் பள்ளி முதல்வர் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 11:56:57
Privacy-Data & cookie usage: