மின்சாரம் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலாயா பள்ளியில் நடந்தது!

schedule
2022-07-09 | 09:42h
update
2022-07-09 | 09:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

An awareness program on electricity saving for students was held at Siruvachur Almighty Vidyalaya School near in Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் துணை மின்நிலையம் சார்பில், சார்பில் மின்சார சிக்கனம் குறித்து இளம்பருவத்திலேயே பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில், தாளாளர் ஆ.ராம்குமார் முன்னிலையில், உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதன்மை செயலாளர் செந்தில் வரவேற்றார்.

Advertisement

நிகழ்ச்சியில், 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளிடையே மின்சார சிக்கனம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மின்சிக்கனம் குறித்து பேசிய பள்ளி மாணவ மாணவிகள் 5 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இளமின் பொறியாளர் தியாகராஜன் உள்ளிட்ட மின்வாரிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பள்ளி துணை தாளாளர் சி.மோகனகசுந்தரம், பள்ளி முதல்வர் ஹேமா. ஆசிரியர்கள் சந்திரோதயம், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் மின் சிக்கனம் குறித்த துண்டு பிரசுரங்கள் பள்ளி மாணவ மாணவிகளிடம் வழங்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 02:08:08
Privacy-Data & cookie usage: