பார்வைத் திறன், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு திறன்பேசிகள்: பெரம்பலூர் கலெக்டர்!

schedule
2022-03-03 | 14:22h
update
2026-06-14 | 15:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Smartphone for Visually Impaired and Hearing Impaired: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசி வழங்கப்பட உள்ளது. திறன்பேசி பெற விரும்பும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட நபர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவராகவும், 18 வயது முதல் 60 வயது வரையிலான இளங்கலை கல்வி கற்பவர்கள், சுயதொழில் புரிபவர்கள் மற்றும் வேலைவாய்;ப்பற்ற இளைஞர்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மத்திய மற்றும் மாநில அரசு ஊழியராக இருத்தல் கூடாது.

மேலே குறிப்பிட்ட தகுதிகள் கொண்ட மாற்றுத்திறனாளி நபர்கள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், படிப்பவராயின் கல்லூரிலிருந்து படிப்பதற்கான பெறப்பட்டச் சான்று/ சுயதொழில் புரிபவர்கள் / வேலைவாய்ப்பற்ற பட்டதாரியாயின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் 621 212 என்ற முகவரியில் 18.03.2022-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04328 – 225474 எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 15:33:18
Privacy-Data & cookie usage: