பெரம்பலூர் அருகே இன்று காலை, கிணற்றில் வழுக்கி விழுந்த விவசாயி சாவு!

schedule
2019-09-19 | 08:22h
update
2019-09-19 | 09:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Slipped and fell into the well to die farmer! near in Perambalur Today

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் வெங்கடாசலம் (வயது 80), விவசாயியான இவர் இன்று காலை ஊருக்கு அருகே உள்ள வயலுக்கு சென்று சுற்றிப்பார்த்து கொண்டிருந்தார். அப்போது கிணற்று சுற்றுப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். நேற்றிரவு பெய்த அப்பகுதியில் உள்ள களிமண் வழவழப்பாக இருந்தது. இதில் நிதானம் தவறி கால் இடரியாதால், சுதாகரிப்பதற்குள், எதிர்பாராவிதமாக அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்தார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு முதலுதவி அளித்து அருகில் உள்ள பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விவசாயி வெங்கடாசலம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், இறந்த போனவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கிடத்தி உள்ளனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 02:02:35
Privacy-Data & cookie usage: