“Smokeless village” to change the IOC on behalf of the 34 villages in Ramanathapuram Districts

இராமநாதபுர மாவட்டத்தில் இந்திய அரசு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வருகின்ற 20.04.2018ல் “கிராம ஸ்வராஜ் அபியான்” திட்டத்தின் கீழ் உஜ்வாலா தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளது. 15,000 எல்பிஜி கிராமங்களில் உஜ்வாலா தினம் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிகழ்வு எல்பிஜியின் பாதுகாப்பு மற்றும் தொடர்ந்து எரிவாயுவை பயன்படுத்துதல் மட்டுமில்லாமல் தங்களது எல்பிஜியின் பயன்பாடுகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அமையும். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் 500 பயனாளிகள் கலந்து கொள்ளவும் அதில்100 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது என இந்தியன் ஆயில் கார்பரேசன்( எல்பிஜி) நிறுவன மேலாளர் சரவணக்குமார் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் இப்பணி குறித்து ஆய்வு மேற் கொண்ட அவா் மேலும் கூறியதாவது எல்பிஜி பஞ்சாயத்து என்பது ஒரு சமூக கூட்டம் அதில் எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு விவாதிக்க, கற்றுக்கொள்ள மற்றும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு மேடையாக அமையும் தொடா்ந்து சமையல் எரிவுாயுவை பயன் படுத்தும் அனுபவமுள்ள மகளிர்தங்களின் தன்னம்பிக்கையின் மூலம் மற்ற மகளிரின் நம்பிக்கையையும், இந்த சுத்தமான எரிவாயுவை பாதுகாப்பாக மற்றும் பயமின்றி பயன்படுத்த அறிவுரைகள் வழங்கப்படும்.

மேலும் பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதர மேம்பாடு, பெண்களுக்கான ஆளுமை மற்றும் சுற்றுச்சுழலல் பாதுகாப்பு மேம்படும். இந்த உஜ்வாலா தினத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 16 கிராம பஞ்சாயத்துக்களில் கொண்டாடப்படவுள்ளது. மாவட்டத்தில் 36 கிராமங்களை “புகையில்லா கிராமமாக ” மாற்ற முடிவெடுத்து கிராமங்கள் தோ்வு செய்ய்ட்டுள்ளன.

உஜ்வாலா தினத்தில் புதிய வாடிக்கையாளர் விவரங்கள் பதிவு செய்தல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் இவ்வாறாக மேலாளா் சரவணக்குமார் தெரிவித்தார். அப்போது வாலியா ஏஜென்சி உரிமையாளர்கள் முத்துராமலிங்கம், ராஜராம்பாண்டியன், புதுமடம் சுலைகா ஏஜென்சி உரிமையாளா் காமில்உசேன் உடனிருந்தனா்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!