பெரம்பலூர் அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு

schedule
2017-09-05 | 07:16h
update
2026-07-03 | 14:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

snake bite farmer death near in Perambalur

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் அருகே உள்ள பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 55). விவசாயம் செய்து வருகிறார்.

Advertisement

விவசாயத்துடன் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். கடந்த செப்.1 ம் தேதி சம்பவத்தன்று, பாலசுப்பிரமணியன் தனக்கு சொந்த வயலில் ஆடுகளை மேய்த்து வந்தார். அன்று பாம்பு ஒன்று தீண்டியது.

பாலசுப்பிரமணியன் பாம்பு தீண்டிய தகவலை அங்குள்ளவர்களுக்கு தெரிவித்தன் பேரில் உடனடியாக திருச்சி உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாலசுப்பிரமணியன் நேற்றுமுன் தினம் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் பாலசுப்பிரமணியன் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 14:38:03
Privacy-Data & cookie usage: