பெரம்பலூர் அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த மகன் தற்கொலை!

schedule
2021-03-05 | 06:59h
update
2021-03-05 | 06:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Son committed suicide the broken hearted mother scolded, near in Perambalur

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்- அமுதா தம்பதியினர். இவருக்கு சுஜீதா (20) என்ற மகளும், கார்த்தி(28), பிரவீன் (15) என்ற மகன்களும் உள்ளனர். இதில் சுஜிதா திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். பிரவீன் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் 10 வகுப்பு வரை படித்த கார்த்தி ஜே.சி.பி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். மது அருந்தும் பழக்கம் உள்ள கார்த்தி நேற்றிரவு வழக்கம் போல் மது அருந்துவிட்டு வந்ததால் தாய் அமுதா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்தி நேற்றிரவு வீட்டில் இருந்து காற்றாடியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.09.2026 - 23:44:58
Privacy-Data & cookie usage: