பிறந்த நாள் பரிசாக தந்தைக்கு ஹெலிகாப்டர் பரிசளித்து விண்ணில் வலம் வர செய்த மகன்!

schedule
2026-10-15 | 15:49h
update
2026-10-15 | 16:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Son gifts a helicopter to his father for his birthday, taking him for a ride in the sky!

பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் ஹெலிகாப்டார் ஓனரானர் தனலட்சுமி சீனிவாசன் யுனிவர்சிட்டி வேந்தர் அ.சீனிவாசன். விண்ணில் பறந்து சாதனை! மகன் தந்தைக்கு பிறந்த நாள் பரிசு வழங்கிய அசத்திய சம்பவம் திருச்சி மண்டலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம், திருச்சி மண்டலத்தில் அதிவேகமாக கல்வி. பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் மாவட்டமாக கடந்த 25 வருடங்களாக பயணித்து வருகிறது. அதில் தனலட்சுமி சீனிவாசன் நிறுவனங்கள் சிறுநிறுவனமாக இருந்து தற்போது பெரும் நிறுவனமாக மாறி உள்ளது. அரசாங்கமே ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்து சேர்க்க 15 ஆண்டுகளாக துப்பில்லாமல் கிடக்கும் நிலையில் ஒரு தனி மனிதர் இந்தியாவிலேயே 45 கி.மீக்குள் 3 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்து அசூர வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்நிறுவனத்திற்கு கடன் ஒருபக்கம் இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இன்னும் வளர்ச்சியை நோக்கி டைரக்டர் சங்கர் சினிமா படம் போல வளர்ச்சி எடுத்து வருகிறது. இதை பாராட்டியே ஆக வேண்டும். கடந்த சட்ட மன்ற தேர்தலில் முதல் அமைச்சரே தோற்ற நிலையில் வேறு தொகுதியில் (மண்ணச்சநல்லூர்) நின்று பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் 2வது முறையாக எம்.எல்.ஏ வாக அவரது மகன் கதிரவன் எம்.எல்.ஏவாக வெற்றி வாகை சூடியுள்ளார். இந்த திறமையையும் பாராட்ட வேண்டும்.

Advertisement

பெரம்பலூரில் ஏற்கனவே, ஒரு ஜெட் விமானம் உரிமையாளர் ஒருவர் உள்ள நிலையில், அடுத்ததாக ஒரு சொந்த ஹெலிகாப்டர் ஓனராக தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகங்கின் வேந்தர் அ.சீனிவாசன். சமீபத்தில் வேந்தர் சீனிவாசனின் பிறந்த நாள் பரிசாக அவரது மகன் எம்.எல்.ஏ கதிரவன் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கி கொடுத்து விண்ணில் வலம் வரச் செய்தி திருச்சி மண்டலத்தில் பரபரப்பாக பேசப்படுவதுடன், பாராட்டப்படுகிறது. தந்தைக்கு மரியாதை செய்யும் வகையில் ஒரு மகனாக மதிப்பளிப்பது அவரது நல்ல பண்புகளை ஊர்மக்கள் பாரட்டுகின்றனர். இதே போல, எம்.எல்.ஏ கதிவரன் பிறந்த நாளைக்கு அவரது தந்தை ஒரு உயர்ரக வெளிநாட்டு காரை பரிசாக வழங்கிய சம்பவம் உண்மையிலேயே திருச்சி மண்டல மக்கள் பாராட்டுகின்றனர்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்

குறள் போல இருவரும் மாறி மாறி பரிசளித்துக் கொள்வது எதிர்வரும் சந்ததியினர் உணர்ந்து கொள்ள வேண்டிய பாடம்!

தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் இருந்து இந்த உலக மக்கள் கற்றுக் கொள்ளவேண்டியது ஒன்றுதான். அது கல்வியை கற்பவரை விட அதை வணிகமாக நிர்வகித்து பணத்தை பெருக்குபவர்களே புத்திசாலிகள் என்பதை உணரவேண்டும். ஏற்கனவே ஒரு ஜெட் விமானம் ஓனர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் உள்ள நிலையில், அடுத்ததாக ஹெலிகாப்டர் சொந்தமாக வைத்துள்ளது அடுத்தடுத்து பெரம்பலூர் மாவட்ட மக்களின் வளர்ச்சி வெளி உலகிற்கு பறைசாற்றுகிறது.

தனலட்சுமி சீனிவாசன் நிறுவனங்கள் வளர முக்கியமானது 2. ஒன்று அவருக்காக உழைப்பவர்களுக்கு உரிய ஊதியம் பெரும் மனதுடன் கொடுப்பது. இரண்டாவது அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு (Out Source) உரிய லாபத்தை அள்ளி கொடுப்பதுதான் இவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம். வாங்குகிற இடத்தில் இருக்க கூடாது. கொடுக்கிற இடத்தில் இருக்க வேண்டும் என்பது வேந்தர் சீனிவாசன் அனைவரிடமும் தெரிவிப்பது இதுவும் அவர்களின் அசூர வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.10.2026 - 16:20:07
Privacy-Data & cookie usage: