தென் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

schedule
2018-12-23 | 18:30h
update
2018-12-23 | 18:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

தென் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Advertisement

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ள அறிக்கை:

இந்திய பெருங்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு, தென் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.அவ்வப்போது, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள அணைக்காரன்சத்திரத்தில் 4 செ.மீ.,யும், கடலூர் மாவட்டம் சிதம்பரம், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன. மீனவர்களுக்கு எந்தவிதமான முன் எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 17:55:34
Privacy-Data & cookie usage: