தென்மேற்குப் பருவமழை :மீட்பு நடவடிக்கை குறித்த தீயணைப்புத் துறையின் ஒத்திகை நிகழ்ச்சி

schedule
2017-06-19 | 16:13h
update
2026-04-29 | 17:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Southwest monsoon: Rehearsal performance of fire department on rescue operation

பெரம்பலூர் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு நடவடிக்கை குறித்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பா.பாஸ்கரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முகப்பில் இன்று நடைபெற்றது.

தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளதால் மழைக்காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்இ வெள்ளம்இ மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

இந்நிகழ்ச்சியில் ஏரிஇ குளம் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறையின் மூலம் மீட்க பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்தும்இ அவற்றைப் பயன்படுத்தும் முறை குறித்தும் தீயணைப்பு வீரர்கள் விரிவாக எடுத்துறைத்தனர்.

ஒரே சமயத்தில் 10 நபர்களை மீட்கும் திறன்கொண்டது ரப்பர் படகு இ மீட்பு பணியின்போது 100 மீட்டர் சுற்றளவிற்கு வெளிச்சம் தரவல்ல உயர் கோபுர விளக்குஇ உயிர்காக்கும் மிதவை மற்றும் உயிர்காக்கும் உடை (லைப் ஜாக்கெட்)இ இரும்பு பொருட்களை வெட்ட வல்ல ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி(ஸ்பெரட்டர் மற்றும் கட்டர்)இ மிதவை பம்பு (வெள்ள காலத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற)இ விபத்து நேரங்களில் வாகனங்களின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்க உதவும் (ஏர் லிப்டிங் பேக்)இ தீ விபத்து ஏற்படும் காலங்களில் மக்களை காப்பாற்றுவதற்காகவும்இ பொருட்சேதங்களை தவிர்ப்பதற்காகவும் அதிக தூரத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடிக்க உதவும் கருவிகள் ஆகிய பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு அவற்றின் இயக்கம் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பால்ராஜ், போக்குவரத்து அலுவலர் சதாசிவம், தீயணைப்பாளர்கள் செந்தில்குமார், செய்வமணி, இன்பராசன், சிவகுரு, பால்ராஜ், தனபால் உள்ளிட்ட மீட்பு பணிகள் துறை பணியாளர்கள் கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்ச்சி செய்து காட்டினார்கள்.

மாவட்ட ஆட்சியரக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மீட்பு நடவடிக்கைள் குறித்து தெரிந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2026 - 17:04:34
Privacy-Data & cookie usage: