பெரம்பலூர் அருகே வங்கி மேலாளரை தரக்குறைவாக பேசிய அரசு பேருந்து ஓட்டுநனர் மீது வழக்குப் பதிவு

schedule
2016-10-16 | 18:29h
update
2026-09-23 | 08:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Speaking at the bank manager and other bus drivers In Perambalur booked for indecent

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம் சீகூர் கிராமத்தை சேர்ந்தவர் மலர் கண்ணன் ( வயது 31) அரசு விரைவு பேருந்து ஓட்டுனர். இவர் வயலப்பாடி கிராமத்தில் உள்ள ஐ.ஓ.பி வங்கியில் ரூ. 7 லட்சத்து 25 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். இதில் ரூ 2 லட்சம் வரை திருப்பி செலுத்தி உள்ளார்.

Advertisement

கடந்த 4 ந் தேதி அன்று அகரம் சீகூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வயலப்பாடி வங்கி மேலாளர் அபிலேஷ் யோக் (26) மலர் கண்ணனை சந்திந்து, ஓட்டுனர் மலர் கண்ணன் செலுத்த வேண்டிய கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு கேட்டுள்ளார்.

அதற்கு மலர் கண்ணன், வங்கி மேலாளரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிய கூறப்படுகிறது . இது குறித்து வங்கி மேலாளர் அபிலேஷ் யோக், மங்களமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு உதவி ஆய்வாளர் முருகேசன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 08:02:08
Privacy-Data & cookie usage: