குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம்: பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-08-13 | 21:14h
update
2026-09-03 | 09:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Special Business Loan Camp for MSMEs: Perambalur Collector Info!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப் படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்கி வருகிறது. திருச்சி கிளை அலுவலகத்தில் (33,K.R.T பில்டிங் இரண்டாவது தளம் பிராமினேட் ரோடு கண்டோன்மெண்ட் திருச்சி 620001) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 17.08.2022 அன்று முதல் 02.09.2022 அன்று வரை நடைபெற உள்ளது.

இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி‌.ஐ.ஐ.சி யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்பட உள்ளது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும்.

Advertisement

இந்த அறிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர்கள் / தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில்கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் ஏதேனும் விவரங்களுக்கு 0431 – 2460498, 4030028, 94431 10899, 94443 96815 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 09:51:34
Privacy-Data & cookie usage: