Special camp collector Natarajan launched the fssai license

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு வணிகம் செய்யும் வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

சிறப்பு முகாமை கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் உணவு வணிகர்கள் 5 ஆயிரத்து 810ம் அரசு உணவு வினியாகம் செய்பவர்கள் 3 ஆயிரத்து 905ம்மொத்தம் 9 ஆயிரத்து 715 உணவு வணிகர்கள்உள்ளனர்.

அரசு உணவு வினியோகம் செய்பவர்கள் ஆயிரத்து 402 பதிவுசான்றும் 9 பேர் உரிமமும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளனர்.

மீதமுள்ள 2 ஆயிரத்து 494 அரசு உணவு வினிேயாகம் செய்பவர்களும் 2 ஆயிரத்து 65 தனியார் உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுகள் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிறு மற்றும் குறு உணவு வணிகம் செய்யும் வணிகர்கள் முதல் அனைத்து உணவு வணிகர்களும் உரிமம் மற்றும் பதிவுகள் கட்டாயம் பெற வேண்டும்.

இதற்கென சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமினை வணிகர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என பேசினார்.

மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ஜெதீஸ் சந்திரபோஸ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஜான்பிரிட்டோ, தர்மர், கர்ணன், கருணாகரன், முத்துசாமி, நாகலிங்கம்,வீரமுத்து, மோகன்ராஜ், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் வணிகர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கருவுல அலுவலர்கள், ஸ்டேட் வங்கி ஊழியர்கள் முகாமில் பங்கேற்று உணவு பாதுகாப்பு பதிவுசான்று வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

செய்தி: சிவசங்கரன், ராமநாதபுரம்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!