Special camp in Perambalur district to rectify grievances related to food supply!

பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம், சிறுவாச்சூரிலும், வேப்பந்தட்டை வட்டத்தில் வேப்பந்தட்டையிலும், குன்னனம் வட்டத்தில் வேப்பூர் கிராமத்திலும், ஆலத்தூர் வட்டத்தில், கொளக்காநத்தம் கிராமத்திலும், 14.05.2022 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம், என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!