குரூப் 2 தேர்வுகளுக்கான சிறப்பு இலவசப் பயிற்சி வகுப்பு

schedule
2017-05-26 | 16:10h
update
2026-04-17 | 02:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Special Free Training Class for Group 2 Exams

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று குரூப் 2A தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பை இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மணிவேல் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலைநாடும் மாணவ மாணவிகளுக்கு அவ்வப்போது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

அதனடிப்படையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் நடத்தப்படவுள்ள குரூப் 2ஏ தேர்வுக்கும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படவுள்ள ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் எழுத்துத் தேர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படவுள்ள தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஏற்கனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு சிறந்த முறையில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றது.

இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்று இதுவரை 200க்கும் மேற்பட்ட மாவண-மாணவிகள் அரசுப்பணிக்குத் தேர்வாகி உள்ளனர். இன்றைய பயிற்சி வகுப்பில் சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

காலையில் தமிழ்நாடு மற்றும் மத்திய அரசின் அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் தேர்வுக்கான பயிற்சிகளும், மதியம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் தமிழக அரசின் இந்தப்பயிற்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக தெரிவித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2026 - 02:19:29
Privacy-Data & cookie usage: