Special Manuneethi camp in the Chillakkudi : Rs.1.78 crore welfare assistance to public

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா சில்லக்குடி கிராமத்தில் இன்று ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல துறைகள் சார;ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்து அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இன்றைய சிறப்பு மனுநீதி நாள் முகாமில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறை வாயிலாக 191 பயனாளிகளுக்கு 1 கோடியே 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இன்றைய சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் 204 மனுக்கள் பெறப்பட்டு, தகுதியுடைய 69 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும் 4 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 131 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) புஷ்பவதி, மாவட்ட பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாண்டியன், வட்டாட்சியர்கள் சீனிவாசன், ஷாஜஹான்(ச.பா.தி), உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!