Special Private Sector Employment Camp for Women : Perambalur Collector Info!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் அக்.20. அன்று நடத்துகிறது.

டாட்டா எலக்ட்ரானிக்ஸ் (TATA ELECTRONICS) நிறுவனத்தின் ஓசூர் ஆலையில் 1000-க்கும் மேற்பட்ட பெண் வேலை நாடுநர்கள் இளநிலை தொழில் நிபுணர் பதவிக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்நிறுவனத்தில் 18 வயது முதல் 20 வயது வரை உள்ள 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய ஊதியமாக மாதம் ஒன்றுக்கு 16,500 ரூபாய் வழங்கப்படும். மேலும், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதி செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்காணும் பதவிக்கான நேர்காணல் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் 20.10.2022 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை (TATA) நிறுவனத்தால் நடத்தப்படவுள்ளது. எனவே, இம்முகாமில் 18 வயது முதல் 20 வயது வரை உள்ள 12-ம் வகுப்பு (2020, 2021 மற்றும் 2022-ல் கல்வியாண்டில்) தேர்ச்சி பெற்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற பெண்கள் மட்டும் கலந்து கொண்டு பணி நியமனம் பெற்று பயன்பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை (9499055913) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!