திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-12-07 | 23:52h
update
2026-06-18 | 12:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Special scholarships for talented athletes; Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) (Special Scholarship for Elite Sports Persons Scheme – ELITE) , பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (Mission International Medals Scheme – MIMS), வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (Champions Development Scheme – CDS), ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதிகள் :

மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டினை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைய தளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 15.12.2022 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அஞ்சல் வழியில் நேரடியாக விண்ணப்பித்து இருந்தாலும் மீண்டும் இணைய வழியில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 12:29:34
Privacy-Data & cookie usage: