பெரம்பலூர் மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி!

schedule
2023-10-05 | 13:05h
update
2023-10-12 | 16:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Speech competition for students on behalf of Perambalur district DMK Engineering Wing!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட பொறியாளர் அணி சார்பில் பொறியியல் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. 06.10.2023 காலை 10.00 மணியளவில், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார் தலைமையில், பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடைபெறும்.

Advertisement

பொறியாளர் அணி மாவட்ட தலைவர் பி.எஸ்.வேல்முருகன் வரவேற்கவும், அமைப்பாளர் தி.இராசா , துணை அமைப்பாளர்கள் பி. செல்லசாமி, கே.பெரியசாமி, ஆர்.ரவிச்சந்திரன், இரா. ராஜாராம், ஜி.ராஜசேகர் ஆகியோர் முன்னிலையும் வகிக்கின்றனர்.

திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

போட்டியில் சட்டமன்ற தொகுதிகளில் முதல் 3 இடத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10,000. வழங்கப்படும். இரண்டாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும். மூன்றாம் பரிசாக ரூ.3,000. வழங்கப்படும். மேலும் மாநில அளவில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.08.2026 - 15:38:37
Privacy-Data & cookie usage: