பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் ; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-04-09 | 10:16h
update
2022-04-09 | 10:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Speech competitions for school and college students; Perambalur Collector Information!

நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பெற உள்ளன.

Advertisement

போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.3ஆயிரமும், மூன்றாம்பரிசு ரூ.2 ஆயிரமும் என பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றும் வழங்கப்பெற உள்ளன. இவை அல்லாமல் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப் பெற உள்ளது.

போட்டி நடைபெறுமிடம், நாள், நேரம், விதிமுறைகள் குறித்து பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர், கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் சுற்றறிக்கை அனுப்பி தெரிவிக்கப்படும். கொரோனா தீநுண்மி நோய்த் தொற்று தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியுடனும் போட்டிகள் நடத்தப்பெறும். இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று மாணவர்கள் பயன்பெறுமாறு பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 12:35:26
Privacy-Data & cookie usage: