தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்: பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

schedule
2022-07-19 | 02:47h
update
2026-06-17 | 05:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Speech Competitions for School Students by Tamil Development Department: Perambalur Collector Notification!

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இதன்படி, 2022-ஆம் ஆண்டு சூலை-28 ஆம் நாள் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை யொட்டி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு தொகைகள் வழங்கப்பெற தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் 28-07-2022–வியாழக்கிழமை அன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு ரூ.3,000/-, மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000/- இவை அல்லாமல் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் ரூ.2000/– சிறப்பு பரிசு என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது. காலை 09.30 மணிக்கு போட்டியானது தொடங்கப்படும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவ/மாணவிகள் இப்பேச்சு போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 05:07:18
Privacy-Data & cookie usage: