ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதியுதவி: பெரம்பலூர் ஆட்சியர் தகவல்

schedule
2019-01-11 | 11:07h
update
2019-01-11 | 11:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sponsored by the State Government to make a pilgrimage to Jerusalem: Perambalur Collector Info

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

தமிழ்நாட்டை சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20,000- நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

இவ்விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம்.

இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியன www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவாpயில் காணலாம். விண்ணப்பபடிவங்களை படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் “ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்” என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 13:54:30
Privacy-Data & cookie usage: