பெரம்பலூரில் முதல்அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள்: 1350 பேர் பங்கேற்பு

schedule
2020-02-18 | 16:20h
update
2020-02-18 | 16:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sports Competition for the Chief Minister’s Cup in Perambalur: 1350 participants

பெரம்பலூரில் முதல்அமைச்சர் கோப்பைக்கான மாவட்டஅளவிலான விளையாட்டுப்போட்டிகள் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில்,எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. போட்டிகளை பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

Advertisement

விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் க.பாபு அனைவரையும் வரவேற்றார். மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், பெண்கள் விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயக்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

25 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக தடகளப் போட்டிகள், குழு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. தடகளப் போட்டிகளில் 100மீ., 200மீ, 400 மீ, 400மீ தடைஓட்டம், 1500மீ, ஆண்களுக்கான 10ஆயிரம் மீட்டர் ஓட்டம், மகளிருக்கான 5ஆயிரம் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், சங்கிலி குண்டுஎறிதல், ஈட்டிஎறிதல், ஜூடோ, குத்துச்சண்டை, நீச்சல்போட்டி, கைப்பந்துபோட்டி, கபாடி, ஆக்கி, டென்னிஸ், கூடைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் 1350 பேர் ஆன்லைன் முறையில் பதிவு செய்துகொண்டு போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் முதல் இடத்தை பெறும் வீரர்கள், அணிகள் சென்னையில் 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினா; தொpவித்தனா;.

முடிவில் தடகள பயிற்சியாளர் கோகிலா நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 01:37:46
Privacy-Data & cookie usage: