நாமக்கல்லில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

schedule
2018-11-15 | 14:46h
update
2026-09-19 | 02:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sports competitions for Staff, on the Co-operative Week celebration in Namakkal

கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.

Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் 65வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் போட்டிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கபாடி, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், அகலம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

சுமார் 300க்கும் மேற்பட்ட கூட்டுறவுத்துறை பணியாளர்கள் போட்டிகளில் கலந்துகொண்டனர். டிசிஎம்எஸ் சங்க நிர்வாக இயக்குனர் ரவிகுமார், துணைப்பதிவாளர்கள் ரவிச்சந்திரன், வெங்கடாசலம், பூபாலன், முருகேசன், பாலசுப்ரமணியம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிர்வாக இயக்குனர் குணசேகரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.09.2026 - 02:50:11
Privacy-Data & cookie usage: