பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா

schedule
2019-12-14 | 14:59h
update
2019-12-14 | 15:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sports Festival at Perambalur Golden Gates Vidyashram School

பெரம்பலூரில் உள்ள கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா தாளாளர் இரவிச்சந்திரன், செயலர் அங்கயற்கண்ணி இரவிச்சந்திரன் ஆகியோர்களின் முன்னிலையில் முதல்வர் பவித் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு சிறப்பு விருந்தினதாக கலந்து கொண்டார். நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகிய நால்வகை பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையுடன், சிறப்பு விருந்தினரால் ஒலிம்பிக் விளக்கு ஏற்றப்பட்டு தேசிய அளவில் டென்னிஸில் வெற்றி பெற்ற விஜய், சூர்யா, ரித்திக்ராஜ், சக்திராம், அபிராமி, ஹர்ஷினி சரோஜ், முகமது சமீம் ஆகியோர் ஒலிம்பிக் விளக்கை தாங்கி வலம் வந்து பள்ளி விளக்கை ஏற்றி விழா தொடங்கப்பட்டது.

Advertisement

கே.ஜி மழலையர்களின் மனம் கவர்ந்த உடற்பயிற்சியுடன், வண்ணமிகு சேலைகளில் வடிவங்களை உருவாக்கும் வண்ண மலர்களின் உடற்பயிற்சி, வான்குடை மிதவை உடற்பயிற்சி , டேக்வாண்டோ, பிரமிடு, காற்றின் அலைவரிசையில் கண்கவர் உடற்பயிற்சி ஆகியவை இடம் பெற்றது. மாவட்ட போலீஸ் எஸ்.பி நிஷா மழலையர்களின் ஓட்டப் பந்தையத்தை தொடங்கி வைத்து பரிசுகள் வழங்கினார், அத்துடன் ஓட்டப் பந்தய போட்டி, தடை தாண்டும் ஓட்டம், தொடர் ஓட்டம் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விளையாட்டு போட்டிகளில் நிலம் அணியினர் முதல் பரிசையும் நீர் அணியினர், இரண்டாம் பரிசையும் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 15:21:18
Privacy-Data & cookie usage: