ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ் குழுமம் இல்லத் திருமண விழா, பெரம்பலூரில் நாளை நடக்கிறது!

schedule
2022-04-02 | 18:14h
update
2022-04-04 | 10:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sri Amman Bankers Group Home Wedding Ceremony in Perambalur tomorrow!

பெரம்பலூர் நகரின் பிரபலமான முக்கிய ரியல் தொழில் அதிபரும், ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ், என்.எம் ரெசிடென்சி, என்.எம். மருத்துவமனை மற்றும் ஸ்ரீமுத்தையா மெட்ரிக்குலேசன் பள்ளி, ஸ்ரீமுத்தையா கல்வி அறக்கட்டளை நிறுவனரும், தாளாளருமான ந.முத்தையா இல்லத் திருமணம் நாளை ஏப்.3 ஞாயிறன்றுநடக்கிறது.

பெரம்பலூர் கோனேரிப்பாளையத்தை சேர்ந்த நல்லங்கி கோனார் – தனம் ஆகியோரின் மகன்வழிப் பெயர்த்தியும், குரும்பலூரை சேர்ந்த மூ.ராமசாமி கோனார் – ரா.பெரியம்மாள் ஆகியோரின் மகள்வழிப் பெயர்த்தியும், ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ் குழும நிறுவனர் ந.முத்தையா -விஜயாமுத்தையா தம்பதியரின் மகளும், டாக்டருமான அறிவொளி முத்தையாவிற்கும், பெரம்பலூர் அருகே உள்ள எசனை – கீழக்கரையை சேர்ந்த பெருமாள் கோனார் – ரா.பச்சையம்மாள் ஆகியோரின் மகன் வழிப்பேரனும், கீழக்கரையை சேர்ந்த . பெருமாள் கோனார் – பெ.தங்கம்மாள் ஆகியோரின் மகள்வழிப்பேரனும், துறைமங்கலத்தில் வசித்து வரும், பட்டதாரி ஆசிரியருமான ரா.ராஜமாணிக்கம் – ரா. செல்வராணி ஆகியோரின் மகனும் டாக்டருமான சத்தியசீலனுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்டி , நாளை காலை 7.31 – 9 மணிக்குள் பெரம்பலூர் ஸ்ரீகர்ணம் சுப்பிரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில் திருமணம், வரவேற்பு, விருந்து நடக்கிறது.

Advertisement

விழாவில், தமிழக அளவிலான, அரசியல் கட்சி பிரமுகர்கள், பெரம்பலூர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பிரபல வர்த்தகர்கள், சிறு, குறு வணிகர்கள், கல்வி நிறுவன தாளாளர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ், என்.எம் ரெசிடென்சி, என்.எம். மருத்துவமனை மற்றும் ஸ்ரீமுத்தையா மெட்ரிக்குலேசன் பள்ளி, ஸ்ரீமுத்தையா கல்வி அறக்கட்டளை ஊழியர்கள், மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மணமக்கள் வீட்டார்கள் நிறுவனர் ந.முத்தையா – விஜயாமுத்தையா, ரா.ராஜமாணிக்கம், செல்வராணி – ராஜமாணிக்கம், டாக்டர் திலீபன்முத்தையா – டாக்டர் ஷில்பிகாதேவி திலீபன் மற்றும் செல்வி ரா.கனியமுது, குரும்பலூர் ராஜேந்திரன் – செல்வாம்பாள், வை.செல்வக்குமார் – சித்ரா, பாலகிருஷ்ணன் – சுதா, க.ராஜா – சுஸ்மிதா மற்றும் மணமக்கள் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 13:31:52
Privacy-Data & cookie usage: