ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ்-ரியல்எஸ்டேட் நிறுவனர் இல்ல திருமண விழா: முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தினர்!

schedule
2022-04-04 | 19:20h
update
2022-04-04 | 19:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sri Amman Bankers-Real Estate Founder House Wedding Ceremony: Congratulations by Celebrities!

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் இயங்கிவரும் ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ்-ரியல்எஸ்டேட்; மற்றும் புரொமோட்டர்ஸ், முத்திரைத்தாள் விற்பனையகம், ஸ்ரீமுத்தையா மெட்ரிக் பள்ளி, ஸ்ரீமுத்தையா கல்வி அறக்கட்டளை என்.எம். ரெசிடென்சி, என்.எம்.கிளினிக், உள்ளிட்ட ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ் குழுமத்தின் நிறுவனர் முத்தையா- விஜயாமுத்தையா மகள் டாக்டர் அறிவொளிமுத்தையாவிற்கும் நெய்குப்பை அரசு உயர்நிலைப்பள்ளி சிறப்புநிலை பட்டதாரி ஆசிரியர் ராஜமாணிக்கம்-செல்வராணி மகன் டாக்டர்
சத்தியசீலனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமணவிழா பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் உள்ள கர்ணம் சுப்ரமணியன் திருமணமகாலில் நேற்று நடந்தது.

Advertisement

விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் செயலாளர் நீல்ராஜ், இயக்குனர் மணி, பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், நகர்மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் குன்னம் சி. ராஜேந்திரன், நகர் மன்ற முன்னாள் துணைத்தலைவர் ஓவியர் முகுந்தன். டாக்டர்கள் சோமசுந்தரம் கண்ணுசாமி, செங்குட்டுவன், திருமண மகால் உரிமையாளர்கள் பாபு, பூபதி, ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் சுப்புடு, பச்சமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை இரா. தமிழ்ச்செல்வன், பொதுப் பணித் துறை உயர் அதிகாரி அந்தமான் செல்லபெருமாள், திருச்சி வழக்கறிஞர் பூபால், டிராவல்ஸ் அதிபர்கள் அரசு அலுவலர்கள், வியாபார பிரமுகர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள்
மருத்துவத் துறையினர், கல்வியாளர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விழா ஏற்பாடுகளை , டாக்டர் திலீபன் முத்தையா, டாக்டர் ஷில்பிகாதேவி, ஸ்ரீமுத்தையா மெட்ரிக் பள்ளி தாளாளர் பேராசிரியர் செந்தில்குமார், டாக்டர் ராம்குமார் மற்றும் ஸ்ரீ அம்மன் பேங்கர்ஸ் குழுமத்தின் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 21:01:33
Privacy-Data & cookie usage: