நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா ரூ.3.5 லட்சம் மதிப்பில் மலர் அலங்காரம்

schedule
2019-01-04 | 17:13h
update
2019-01-04 | 17:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sri Hanuman Jayanti Festival flower decoration worth Rs 3.5 lakh in Namakkal

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு அபிசேம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு
ஆஞ்சநேயருக்கு ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

நாமக்கல் கோட்டையில் புரான சிறப்புப் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு இன்று 5ம் தேதி சனிக்கிழமை, அமாவாசை, மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற உள்ளது. 11 மணிக்கு சிறப்பு அபிசேகம், மதியம் 1 மணிக்கு தங்க கவசம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெறும்.

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் முதன் முறையாக திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெறுவதுபோல் பிரமாண்டமான மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 1.5 டன் எடையுள்ள ரோஜா, மல்லிகை, முல்லை, ஜெர்பாரா போன்ற பல்வேறு வகையான மலர்களை பெங்களூரில் கொண்டு வந்து நேற்று அதிகாலை முதல் மலர்களைக் கோர்த்து கோவிலில் அலங்காரம் செய்யும் பணி நடைபெற்றது.

இரவு 10 மணியளவில் இந்த அலங்காரம் நிறைவு பெற்றது. சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுமார் ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் இந்த அலங்காரத்தை செய்துள்ளார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.09.2026 - 17:45:18
Privacy-Data & cookie usage: