நாளை பெரம்பலூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம் : 8,602 பேர் எழுதுகின்றனர்

schedule
2018-03-06 | 08:40h
update
2026-07-02 | 08:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Start of public examinations in the 11th grade district tomorrow: 8.602 pupil write

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி.அருள்மொழிதேவி விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு அரசு பொதுத்தேர்வு 07.03.2018 முதல் 16.04.2018 முடிய நடைபெறவுள்ளது.

இத்தேர்வில் 4,284 மாணவர்களும், 4,318 மாணவிகளும் என மொத்தம் 8,602 பேர் தேர்வு எழுத உள்ளனர். இத் தேர்வு மையத்திற்கு முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 27 தலைமையாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல் 27 தேர்வு மையத்திற்கும் 27 துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலராக 07 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பபட்டுள்ளனர்.

Advertisement

தேர்வு மையத்திற்கு 9 வழித்தடங்களில் வினாத்தாட்களை பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்ல 9 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத் தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக 556 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இத்தேர்வுகள் நல்ல முறையில் நடைபெற 71 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் இத்தேர்வு பணியில் 636 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

தேர்வுப் பணியில் ஈடுபடவுள்ள அனைவருக்கும் 26.02..2018 மற்றும் 27.02..2018 ஆகிய இரண்டு நாட்கள் எவ்வாறு தேர்வு முறைகளை பின்பற்றவேண்டும் என்பது குறித்து கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநரால் வழங்கப்பட்ட நெறிமுறைகளை விளக்கத்துடன் எடுத்துக் கூறி அதனை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுரைகள் எடுத்துரைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் தலைமையில் கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களைக் கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அலைபேசி (கைபேசி)யை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.07.2026 - 08:28:56
Privacy-Data & cookie usage: