பெரம்பலூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது அரசு விரைவு பேருந்து மோதி விபத்து : 8 பேர் காயம்

schedule
2018-04-16 | 10:30h
update
2026-07-05 | 08:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

State Express bus collided with a lorry near the front of the plea to the accident: 8 injured

பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

நேற்றிரவு சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி புறப்பட்ட அரசு விரைவு பேருந்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் பெரம்பலூர் அருகே உள்ள நான்கு ரோடு பகுதியில் உள்ள திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது, அப்போது கடலூர் மாவட்டம், பெண்ணாடம் சிமெண்ட் ஆலையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு — நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது அரசு விரைவு பேருந்து மோதியது.

இந்த விபத்தில், அரசு விரைவு பேருந்து ஓட்டுனர் மாரிமுத்து, பேருந்தில் பயணித்த மூதாட்டி முத்தம்மாள் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர், நெடுஞ்சாலை விபத்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 08:12:50
Privacy-Data & cookie usage: