இழப்பீடு வழங்காத 4 பேருந்துகள் ஜப்தி : பெரம்பலூர் நீதிமன்றம் உத்திரவு.

schedule
2017-01-11 | 14:31h
update
2026-06-27 | 14:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

State Transport Corporation buses to provide compensation for the confiscation of the 4: Perambalur court ordered.


விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 4 பேருந்துகளை ஜப்தி செய்ய பெரம்பலூர் நீதிமன்றம் உத்திரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அருகே உள்ள குண்டூரை சேர்ந்தவர் விஜயகுமார், பொறியாளரான இவர் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து விட்டு புதுக்கோட்டை திருச்சி சாலையில் இரு சக்கர வானகத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதிவிபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். உயிரிழந்த பொறியாளரின் மனைவி கவிதா மற்றும் அவரது மகள் கீர்த்திகா, பெற்றோர்கள் பெரியசாமி, சரஸ்வதி ஆகியோர் இது குறித்து கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 தேதியன்று பெரம்பலூர் நீதிமன்றத்தில் 70 லட்சரூபாய் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2015 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11ம் தேதி பாதிக்கப்ட்ட குடும்பத்தினருக்கு 12 லட்சத்து 48 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்திரவிட்டிருந்தது. மேல் முறையீட்டின் பேரில், வழக்கை விசாரித்த நீதி மன்றம், 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி அன்று 34 லட்சத்து 80 ஆயிரம் வழங்க உத்திரவிட்டது. அரசு போக்குவரத்து கழகம் இப்பீட்டு தொகை வழங்காததால் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த வட்டியுடன் சேர்த்து பாதிக்கப்ட்ட குடும்பத்தினருக்கு 44 லட்சத்து, 65 ஆயிரத்து 800 வழங்க பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு நேற்று உத்திரவிட்டார். மேலும், கும்பகோணம் அரசு போக்குவரத்துகழகத்திற்கு சொந்தமான 4 பேருந்துகளையும் ஜப்தி செய்ய உத்திரவிட்டார். அதன் பேரில் இன்று கோர்ட் அமீனாக்கள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு 4 பேருந்துகளை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 14:54:50
Privacy-Data & cookie usage: