Sterilization camp for livestock; Perambalur Collector Notification!

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 1 மலடு நீக்க சிகிச்சை முகாம் வீதம் 4 ஊராட்சி ஒன்றியத்திற்கு 4 முகாம்கள் நடைபெறவுள்ளது.

15.02.2024 அன்று ஆலத்தூர் ஒன்றியம் புது அம்மாபாளையம் கிராமத்திலும், 16.02.2024 அன்று வேப்பூர் ஒன்றியம் ஒகளூர் கிராமத்திலும், 17.02.2024 அன்று பெரம்பலூர் ஒன்றியம் மேலப்புலியூர் கிராமத்திலும் மற்றும் 19.02.2024 அன்று வேப்பந்தட்டை ஒன்றியம் மங்களமேடு கிராமத்திலும் இந்த முகாம் நடைபெறவுள்ளது.

மேற்காணும் முகாமில் விவசாயிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை, இனப்பெருக்க பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் ஊட்டச்சத்து மேலாண்மைக்காக தாது உப்புக்கலவை வழங்கப்படும். ஆகவே இம்முகாமில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!