பெரம்பலூர் அருகே வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த வீட்டில் நகை திருடிய உறவினர் சிறையிலடைப்பு

schedule
2018-01-25 | 04:50h
update
2026-07-03 | 18:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

stolen jewelry at home relatives who came to the show at the baby shower imprisonment near perambalur

பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூரை சேர்ந்த வெற்றிச்செல்வன் (வயது35), இவர் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், அதே ஊரில் வசிக்கும் இவரது தங்கை பொன்மணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

Advertisement

அப்போது பீரோவில் வைத்திருந்து 17 பவுன் நகை காணமல் போது குறித்து அதிர்ச்சி அடைந்த வெற்றிச் செல்வன், பாடாலூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், மற்றும் எஸ்.ஐ-க்கள் மாரிமுத்து, கணேசன் ஆகியோர் விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் மணிமாறன் என்பவரிடம் நகைகள் இருப்பதும், போதையில் இருப்பதும் தெரியவந்தது.

போதை தெளிந்த உடன் மீண்டும் விசாரணை நடத்திய போலீசார், மணிமாறனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 18:00:50
Privacy-Data & cookie usage: