Strict action if banned Gutka sells spices; Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் குட்கா மற்றும் பான்மசாலா போன்ற போதைப்பொருட்கள் 2013ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் ஆங்காங்கே நுகர்வோருக்கு கிடைக்கப்பெற்று மனிதன் உடல் நலத்திற்கு பெரும் தீங்கினை ஏற்படுத்தி வருகின்றது. எனவே குட்கா மற்றும் பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருள்களை அறவே ஒழிக்கும் பொருட்டு தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் தலைமையில் சென்னையில் ஓமாந்தூரார் மருத்துவமனையில் 22.07.2021 அன்று மாநில அளவிலான புகையிலை, பான்மசாலா மற்றும் குட்கா ஒழிப்பு பற்றி நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில்; தமிழகத்தை இரண்டு மாதங்களுக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா மற்றும் குட்கா இல்லாத மாநிலமாக மாற்றவேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளதை தொடர்ந்து 23.05.2021ல் வெளியிடப்பட்ட தமிழக அரசின் அரசிதழ் அறிவிப்பு எண் 257ஐ அமுல்படுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 29.07.2021 அன்று மாவட்ட அளவிலான காவல் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, வருவாய்த் துறை, சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, போக்குவரத்துத் துறை, வணிகவாpத்துறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அலுவலா;கள் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்களின் தடையை தீவிரமாக அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

உடனடியாக மேற்கானும் துறைகளின் மூலம் சிறப்பு அலுவலரைக் கொண்டு ஒருங்கிணைப்புக்குழு ஒன்றை அமைத்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து குட்கா மற்றும் பான்மசாலா ஒழிப்பு பணியினை மேற்கொள்ள உத்திரவிடப்பட்டது. அதனைத் தொடர்நது 03.08.2021 அன்று தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா மற்றும் குட்கா பொருட்கள் செட்டிக்குளம் பகுதியில் இருப்பு உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்று, காவல்துறையினருடன்; உணவு பாதுகாப்புத்துறை இணைந்து 75 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றினர். இப்பொருள்களை பதுக்கி வைத்திருந்த நபர்களை கைது செய்து காவல்துறை மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மேலும், இந்த குழுவினர் 06.08.2021 அன்று பெரம்பலூர் நகராட்சி பகுதியில் பள்ளிவாசல் தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு, துறையூர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 25 கடைகளில் ஆய்வின்போது தடைசெய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா மற்றும் குட்கா பொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. எனினும், இக்குழுவினரின் தொடர்ந்து அதிரடி ஆய்வு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படும் என்றும், குட்கா பான்மசாலா போன்ற பொருட்களை பதுக்கி வைத்திருத்தல், இருப்பு வைத்தல், விநியோகம் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் வாகனங்களில் எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதால் மேற்கண்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகையிலை மற்றும் பான்மசாலா தொடர்ந்து பயன்படுத்துவதால் உடலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு கடுமையான புற்றுநோய் விளைவுகளை உண்டாக்கும் என்பதால் இதனை பொதுமக்கள் தவிர்த்திடவேண்டும்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டின் சேர்க்கப்பட்ட பொருளாக கொண்ட குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை பொருட்களை தயாரிப்பது, வாகனங்களில் எடுத்துச் செல்வது, விற்பனை செய்வது போன்ற விபரங்கள் ஏதும் தெரியவரும் பட்சத்தில் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தொpவிக்கும் நபரின் ரகசியம் விவரங்கள் காக்கப்படும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!