தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பெரம்பலூரில் மறியல் போராட்டம்.

schedule
2020-12-08 | 13:37h
update
2020-12-08 | 13:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Strike in Perambalur on behalf of workers, farmers and the general public all trade union action committee.

மக்கள் நலன் காத்திடவும், தொழிலாளர்களின் உரிமைகளை மீட்கவும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகளை ஒப்படைப்பதை தடுத்து நிறுத்தவேண்டும், மோடி அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும் மற்றும் டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் விவசாயிகள் சங்கம் சார்பில் நவம்பர் 8 பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

Advertisement

அதனையொட்டி பெரம்பலூர் புதியபேருந்து நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை, திமுக மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஐ மாவட்ட செயலாளர் வீ.ஞானசேகரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தமிழ்செல்வன், சிஐடியு அகஸ்டின், கரும்பு விவசாயிகள் சங்கம், எஸ்டிபிஐ , மக்கள்நீதிமய்யம் முஸ்லீம் லீக், ஐஜேகே ரகுபதி, திராவிடர் கழகம் மற்றும் சிபிஎம் நிர்வாகிகள் எம்.கருணாநிதி, எஸ்.பி.டி.ராஜாங்கம், பி.கிருஷ்ணசாமி உள்பட ஏராளமானோர் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 17:57:04
Privacy-Data & cookie usage: