சாதி சான்று பெற போராட்டம் ; பெரம்பலூர் எம்.எல்.ஏ நடவடிக்கையால் கைவிடப்பட்டது.

schedule
2017-11-19 | 00:58h
update
2017-11-19 | 00:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Struggle to get caste proof; The Perambalur MLA was dropped because of the action.

பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களாக கருதப்படும் மலையாளி இனத்தவர்கள் சாதி சான்று கோரி பெரம்பலூர் மாவட்ட வருவாய்த் துறையினருக்கு விண்ணப்பித்து இருந்தனர். சாதி சான்று மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, மானியம் உள்ளிட்ட அரசாங்கத்தில் சலுகைகளை பெற்று வர உதவும். இந்நிலையில், சாதி சான்று கேட்டு விண்ணப்பித்த நிலையில், வருவாய்த் துறையினர் மறுப்பு தெரிவித்தாக கூறி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோரையாறு, பூமிதானம், வெட்டுவால்மேடு, புதூர், மலையாளப்பட்டி, பனம்பட்டி, சின்ன முட்லு, கொட்டாரக்குன்று பகுதிகளில் வசிக்கும் மக்கள் நாளை திங்கட் கிழமை உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

Advertisement

இதுகுறித்து பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வனிடமும் சிலர் முறையிட்டனர். அதன் பேரில், அப்பகுதியில் சாதி சான்று கோரும் அனைவரையும் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்க கோரினார். அதன்பேரில், நேற்று எம்.எல்.எ தமிழ்ச்செல்வன் அலுவலகத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, மொத்மாக மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் வருவாய்த்துறையினர் உரிய பேச்சு நடத்தினார். அதில் நாளை உரிய ஆவனங்களை வைத்திருப்பவர்களுக்கு திங்கட்கிழமை சாதி சான்றுகளை அளிக்கவும், பின்னர், உரிய ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு ரத்த மற்றும் பழைய சான்றிதழ்களை வைத்து சாதி சான்றிதழ் வழங்க ஆவணம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதன் பேரில் அம்மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டியும், தேனீரும் எம்.எல்.ஏ சார்பில் வழங்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 11:03:47
Privacy-Data & cookie usage: